T24 Tamil Media
இலங்கை

போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்.

இலங்கையில் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் 2 வாரங்களுக்கு பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகள் இணைந்து நடாத்திய கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் கட்டப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும்போது, சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை ஏற்று தமது பயணங்களை மேற்கொள்ளா விட்டால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், எவரேனும் ஒருவருக்கு காய்ச்சல், தடிமல் காணப்பட்டால் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமையவே செயற்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் மற்றும் பஸ்களில் பயணத்தை மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் முகக்கவசங்கள் அணிவதையும் ஒரு மீற்றர் இடைவௌியை பேணுவதையும் கட்டாயமாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் மற்றும் பேருந்துகளில் கிருமித்தொற்று திரவத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினூடாக பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனைய நபர்களை பஸ்கள் மற்றும் ரயில்களில் ஏற்றாதிருப்பதற்கு உரிய துறையினர் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more