மொனராகலை இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் துப்பாக்கிப் பிர யோகம் இடம்பெற்றது.
இதன்போது சந்தேக நபர் பவத்த காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை சந்தேக நபரிடமிருந்து கத்தி, கையெறிகுண்டு மற்றும் துப்பாக்கி ஆகிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.