T24 Tamil Media
இலங்கை

பொருளாதார ரீதியாக பலம்பெறுவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி


பொருளாதார ரீதியாக பலம்பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் இணைத்து விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகிப்பதற்காக புதிய பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார்.

இந்த செயற்பாடுகள் அனைத்து அரசாங்க அதிபர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கியுள்ளார்.

ஊரடங்குச்சட்டத்தை தளர்த்தி மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. பொருளாதார ரீதியாக பலம்பெறுவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதற்காக விவசாயத்திற்கு முன்னுரிமையளித்து தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாவட்ட மட்டத்தில் சுதேச கைத்தொழில்கள் மற்றும் ஏனைய உற்பத்தி கைத்தொழில்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இதற்காக தொழில் முயற்சியாளர்களை வலுவூட்ட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு முழுமையான உதவியை அரசாங்கம் என்ற வகையில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more