நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர்களுடன் சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாட தாம் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட் -19 தொற்றுக்கு மத்தியில் வேறு நாடுகளில் பொருட்களின் விலைகள் குறைவடைந்ததாகவும், எனினும் இலங்கையில் மாத்திரமே கேள்வி அதிகமுள்ள பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கையின் பொருளதாரம், பாரிய அளவில் சரிவடைந்துள்ளதாகவும், நாட்டின் வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாட்டின் பொளாதார நிலைமை குறித்து வினவுவதற்கு உரிமை உள்ளதாகவும், இதனால் ஒளிவு மறைவின்றி அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்