பொருளாதாரம் மற்றும் அரச தனியார் துறைகளின் வருவாயை பலப்படுத்துவதும் நோக்கிலேயே ஊரடங்குச்சட்டத்தை தளரத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சவால்களை வெற்றிகொள்ள மக்கள் தமது கடமை பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை இல்லாதொழிப்பது மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரச தனியார் துறைகளின் வருவாயை பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதன் காரணத்தினால் கடந்த நான்கு வாரங்களாக பிறப்பிக்கப்பட்ட நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டத்தை தளர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இந்நிலையில் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவது நாட்டுமக்கள் அனைவரதும் கடமையாகும்.