T24 Tamil Media
இலங்கை

பொதுத்தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசிற்கு கிடைக்கும் – எதிர்ப்பார்க்கிறார் பீரிஸ்.

எதிர்வரும், பொதுத்தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தமக்கு நிச்சயம் கிடைக்குமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவிற்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட முடியாது. கணிசமான அளவு ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இருந்து அந்த அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் மத்தியில் தவறான குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மிக துரிதமாக அபிவிருத்தியை முன்னெடுத்தார்.

தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் தேவைகளுக்காக போலியான குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்து நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பயனை எவரும் பெற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் கடந்த அரசாங்கத்தில் பாரிய நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். 4

தேசிய பாதுகாப்பு அரசியல் மயப்படுத்தப்பட்டமையினால் பாரிய விளைவுகள் நாட்டில் ஏற்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேசிய பாதுகாப்புக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்குவார். பொதுத்தேர்தலிலும் தேசிய பாதுகாப்பு, துரித அபிவிருத்தி ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும். தமிழ் முஸ்லிம் மக்கள் இம்முறை நிச்சயம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பலமான அரசாங்கத்தில் பங்குதாரர்களாகுவார்கள் என மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more