கொழும்பில் அமைந்துள்ள பேலியகொடை மீன் சந்தை இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்ற பிலியந்திய பகுதியைச்சேர்ந்த ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த மீன் வியாபாரி, கடந்த 18 ஆம் திகதி பேலியகொடைமீன் சந்தைக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே, மீன் சந்தையின் மூன்று தொகுதிகள் நேற்று மூடப்பட்டதுடன், ஏனையஅனைத்து தொகுதிகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் அனைவரும், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு குறித்த பகுதியில் கடற்படையினரால்கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.