அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணத்தினால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு புத்தாண்டை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த தகவலை நேற்றையதினம் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறிப்பிட்டுள்ளார்.