இலங்கையில் வசிக்கின்ற பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் 5 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளதாக பெருந்தோட்ட துறைக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
துறை உயர் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்மிக்க ஒரு கலந்துரையாடலுக்கு பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரம் இந்த நிவாரண கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் பெருந்தோட்ட துறைக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.