T24 Tamil Media
இலங்கை

பெண் கிராம உத்தியோகத்தரிடம் தவறான பேச்சுவார்த்தை!பிரதேச செயலாளருக்கு நேர்ந்தகதி.

இளம் பெண் கிராம உத்தியோகத்தருக்கு, தொலைபேசி ஊடாக தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படும் கற்பிட்டி பிரதேச செயலாளர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கீழ் கடமைபுரியும் இளம் பெண் கிராம சேவகர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதேச செயலாளர், தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியதாக குறித்த பெண் கிராம உத்தியோகத்தர் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாட்டு செய்திருந்தார்.

இதனையடுத்து நேற்றையதினம் குறித்த பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரதேச செயலாளர், புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு புத்தளம் மாவட்டச் செயலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புத்தளம் மாவட்ட உப தலைவர் திலங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்படி சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் பணிப்பஸ்கரிப்பு முன்னெடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more