T24 Tamil Media
இலங்கை

புங்குடுதீவு யுவதியால் பேருந்து நடத்துனருக்கு கொரோனா.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய யாழ்புங்குடுதீவு பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த பெண் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பஸ் சாரதி நடத்துநர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.

அதில் கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபடும் பேருந்தின் நடத்துனர் குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியானவுடன் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையில் அவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் உறுதிப்படுத்தினர்

குறித்த நபருக்கு ஏற்கனவே PCR பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வெளியாகியது.

எனினும் சுகாதாரப் பிரிவினர் 14 நாட்களின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவரை அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தும்பளை வீதி பருத்தித்துறையை சேர்ந்த 39 வயதான சந்தியாபிள்ளை சுபாஸ்பரன் என்ற பஸ் நடத்துனருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் நாளை மாலை மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more