நாளை முதல் பல்வேறு தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து பொதுமுகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாளையதினம் இயக்கப்படவுள்ள புகையிரதங்களில் தொழில்சார் அடையாள அட்டைகள், ஊரடங்கு அனுமதிஅட்டை மற்றும் புகையிரத பருவச்சீட்டு உள்ளவர்களுக்கு மாத்திரமே பயணிக்க முடியுமென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
நேரம் அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை எனவும், அலுவலக சேவைகள் வழமைபோல இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பெட்டியில் 50 பேர் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்படவுள்ளது. தற்போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊரடங்குச்சட்ட அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு மாத்திரம் தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்