T24 Tamil Media
இலங்கை

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் சமூகமளிக்காத காரணத்தால் எதிர்வரும் நவம்பர் மாதம் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நீதிமன்றுக்கு பிள்ளையார் உட்பட ஆறு பேரும் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி டி சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம், 10 ஆம் மற்றும் 16 ஆம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா, கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவச் சிப்பாயான மதுசிங்க ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more