கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதியில் தேங்காய் விற்பனையில் ஈடுபடும் நபரொருவர் தேங்காய் விற்கும் போர்வையில், ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருந்ததின் அடிப்படையில் கைது செயப்படுள்ளார்.
இதன்படி குறித்த நபர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதிக் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன் போது இந்த குறித்த நபரிடமிருந்து 1 கிலோ 152 கிராம் அளவுடைய ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த சந்தேக நபர் தேங்காய் விற்பனையில் ஈடுபடும் போர்வையில், ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் கைதானவர், பிரான்ஸில் தங்கியுள்ள போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரின் உதவியாளர் எனவும் காவற்துறை பேச்சாளர் எனவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.