T24 Tamil Media
இலங்கை

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவையில்லை – அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவை ஏற்படவில்லையென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவை கிடையாது.

பிற நாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்தி எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று எதிர்தரப்பினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிற நாடுகளில் கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டுக்கு வருவதற்கு ஆரம்பத்தில் விருப்பம் தெரிவித்தவர்கள் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

இவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்நாடுகளில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பலர் நாட்டுக்கு வருவதற்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் குறித்த நாட்டுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் சட்டத்திற்கு முரணாக வெளியிடங்களில் தொழில் புரியும் இலங்கையர்களை பொதுமன்னிப்பின்அடிப்படையில் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்தது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more