நாட்டில் உள்ள எந்தவொரு பாடசாலையும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை தனிமைப்படுத்தல்நிலையங்களாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளதெனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில்இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இராணுவத்தளபதி இதனை தெரிவித்துள்ளார்