யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
பூம்புகார் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்த பாசையூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான சில்வெஸ்ரர் சஜித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மீனவர்கள் ஒன்றுகூடி அவரைத் தேடியபோது, பூம்புகார் கடல் பகுதி யில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி பிரேம்குமார் ஆகியோர் சடலத்தைப் பார்வையிட்டதைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.