T24 Tamil Media
இலங்கை

பவித்திராவின் புதிய அறிவிப்பு.

பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சிறப்பாக கண்காணிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்ட அறிவித்தலை விடுத்தார்.

சுகாதார அமைச்சால் ஏற்படுத்தப்பட்ட விசேட செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு குழு கூட்டமே இவ்வாறு நடைப்பெற்றது. இந்த செயற்குழுவில் 35 மருத்துவ அதிகாரிகள், நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் 35 விசேட வைத்தியர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள சுகாதார அவசரகால செயல்பாட்டு மையம் பிரதேச செயலக மட்டத்திலும் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதன்படி, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்படுவது குறித்த தகவல்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக குறித்த சுகாதார அவசரகால செயற்பாட்டு மையத்திற்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் இது குறித்த செயற்பாடுகளை அரச நிர்வாகம் மற்றும் சுதேச நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் ஊடாகவும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை 55 ஆக அதிகரிக்கவும், பல்கலைக்கழகங்களில் 47 பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும், தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 15 பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more