T24 Tamil Media
இலங்கை

பழைய பாராளுமன்றம் கூட்டப்படுவதை மக்கள் விரும்பவில்லை

பழைய பாராளுமன்றம் கூட்டப்படுவதை பொதுமக்கள் விரும்பவில்லையென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாடு சுதந்திரமடைந்தது என்ற நிலைமை ஏற்படும் போது தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தைத் தெரிவு செய்ய முடியும்.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள சவாலுக்கு மத்தியில் நாம் எவ்வாறு வாழ்வாத்தை உறுதிப்படுத்திக் கொள்வது என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
இது சோர்வடைந்துள்ள மக்களை பலப்படுத்துவதற்காகும்.

இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் பேதத்துடன் யாரும் செயற்படக்கூடாது.
ஆனால், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை எடுத்துக் கூறலாம். எதிர்த்தரப்பினரே இவ்வாறு விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

மறுபுறம் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்றும் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் பாராளுமன்றம் கூட்டப்படுவதை மக்கள் விரும்பவில்லை. தேர்தல் அரசியல்வாதிகளால் எதனையும் தீர்மானிக்க முடியாது.

சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மாத்திரமே அதற்கான அதிகாரம் உள்ளது.
வீட்டுக்குள்ளிருந்தாலும் பொது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.


இந்நிலையில் இன்னும் எவ்வளவு காலத்திற்கு வைரசுக்கு பயந்து ஒழிந்து கொண்டிருக்க முடியும் இவை பற்றி சிந்தித்து தீர்க்கமானதொரு முடிவு எடுக்கப்பட வேண்டும

அதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாடு சுதந்திரமடைந்தது என்ற நிலைமை ஏற்படும் போது தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தைத் தெரிவு செய்ய முடியும் என்றார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more