T24 Tamil Media
இலங்கை

பல இலட்சம் பெறுமதியான பொருட்களைத்திருடிய திருடன் கைது.

யாழ்.நகரை அண்டிய சுண்டுக்குளி பகுதியில் வெளிநாட்டவர்களின் இரு வீடுகளை உடைத்து பெருமளவு பொருட்களை கொள்ளையடித்த அதே பகுதியைச்சேர்ந்த சந்தேகநபரை யாழ்ப்பாணம் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த வீடுகளுக்கு அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான பொருள்களும் சந்தேக நபரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள வீதியில் இரண்டு வீடுகள் கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்தமானது.

அவர்கள் ஆண்டு தோறும் வருகை தந்து குறித்த வீடுகளில் தங்கியிருந்துவிட்டு தாம் வாழும் நாட்டுக்குத் திரும்பிவிடுவர்.

அதேபோல் அண்மையில் வந்து தங்கியிருந்துவிட்டு அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கும் கனடாவைச் சேர்ந்தவர்கள் கொழும்புக்கும் கடந்த மார்ச் மாதம் திரும்பிவிட்டனர். 

இந்த நிலையில் வீடுகளைப் பராமரிப்பதற்கு ஒருவர் பொறுப்பளிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று வியாழக்கிழமை அங்கு சென்று பார்த்த போது, இரண்டு வீடுகளும் உடைக்கப்பட்டு பெறுமதியான வீட்டுத் தளபாடங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளை வீடுகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து வீட்டிலிருந்த விலையுயர்ந்த இலத்திரனியல் பொருள்கள் மரத் தளபாடங்கள் போன்ற 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதி மதிக்கத்தக்க பொருள்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் பெரும் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவில் வீட்டின் பராமரிப்பாளரால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்த யாழ்ப்பாணம் காவல்த்துறையினர் திருட்டு இடம்பெற்ற வீடுகளுக்கு மிக அண்மையாக உள்ள வீட்டு உரிமையாளரைக் கைது செய்தனர். 


அவரது வீட்டில் திருடப்பட்ட பொருள்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. சம்பவத்தையடுத்து சந்தேக நபரின் குடும்பத்திடம்விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் வீட்டுக்காவலில் வைத்ததுடன், சந்தேக நபர் விசாரணைகளுக்கான காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 


யாழ்ப்பாணம் குற்றப்பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி முனசிங்க தலைமையில் இந்தத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள். 
விசாரணையின் பின் சந்தேக நபர் நீதிவான் நீீீீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளைமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more