நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அச்ச்சுறுத்தல் காரணத்தினால் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த திடடம் தொடர்பாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுள்ளார்.
மேலும் கொவிட் 19 தொற்றுக்கு சாதகமாக கண்டி, பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் எட்டு மாணவர்கள் சோதனை செய்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பரீட்சைக்கு அமைய 300 மாணவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அவர்களில் 8 பேர் கொவிட் 19 க்கு நேர்மறை சோதனை செய்ததாக பல்கலைக்கழக மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்று மாணவர்களுடன் தொடர்புடையே மேலும் 40 மாணவர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டு பரீட்சை ஒத்திவைக்கபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.