T24 Tamil Media
இலங்கை

பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய சேவை.

இலங்கையில் பரீட்சைகள் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த இணையத்தள சேவை பரீடசைகள் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்வையிடுவதற்கு மேலதிகமாக இந்த சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய, இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் இந்த உறுதிப்படுத்தும் சேவை ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சேவையினூடாக 2001ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை நடத்தப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்கீழ் வௌிநாட்டு பல்கலைக்கழகங்கள், வௌிநாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பரீட்சை விண்ணப்பதாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அங்கீகரித்து உறுதிசெய்யப்பட்ட ஆவணங்கள் வழங்கப்படவுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக விண்ணப்பதாரர்கள் தமது பெறுபேற்றை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more