T24 Tamil Media
இலங்கை

பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்றில்லை.

இலங்கையில் பல மாவட்டங்களிலும் இரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 64 பேரின் இரத்த மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் த.சத்யமூர்த்தி குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கத்து.

யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா என வடக்கு மாகாணத்தில் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு கடந்த சில நாட்களாக உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்பாணத்தில் இடம்பெற்ற குறித்த மத ஆராதனையில் கலந்துகொண்ட மற்றும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பைகளைப் பேணியதாக கருதப்படும் வவுனியாவைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கின்றதா என சோதனை செய்வதற்கான இரத்த மாதிரிகள் சேகரிக்கும் நடவடிக்கை கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையின் இரண்டாம் கட்டப் பரிசோதனை நேற்றயதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை மற்றும் சுகாதாரவைத்திய அலுவலகத்தால் குறித்த மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், வவுனியாவின் காத்தான்கோட்டம் மற்றும் ஓமந்தை,புளியங்குளம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட 14 பேரிடம் குறித்த இரத்தமாதிரிகள் சேர்ககப்பட்டதுடன் அவை மேலதிக ஆய்வுகூட பரிசோதனைக்களிற்காக அனுராதபுரத்திற்கு  அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

குறித்த இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர்களில் எவருக்கும் கொரோனா  தொற்று இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 50 பேரிடம் நேற்று  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.  பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுஏற்படவில்லையென யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட 30 பேரிடமும் கிளிநொச்சியைச் சேர்ந்த 11 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் குறித்த பரிசோதனை நடாத்தப்பட்டது.

அத்துடன், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வீடுகளில் சுயதனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்ட 5 பேர், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் என மொத்தமாக 9 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த 50 பெரும் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகவில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more