நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணத்தினால்
பயணிகளை ஏற்றிச்செல்லும்போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதில்லை என்றும்
பயணிகள் தொடர்ந்தும் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனடிப்படையில் பேருந்து பயணிகள் சங்கத்தின் இணைப்பாளர் விமுக்தி துஷான்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்துடன் காலை வேளைகளில் மாத்திரமே குறிப்பிட்ட எண்ணிக்கை விடவும் அதிகளவான பயணிகள் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குறிப்பிட்டுள்ளார் .
மேலும் அனைத்து உரிமையாளர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துட ன் பேருந்து நடத்துனர்கள் 50இற்கும் மேற்படடவர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதால் பல பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆசனங்களின் எண்ணிக்கையை விடவும் அதிகளவான பயணிகளை ஏற்றிச் சென்ற சுமார் 90 பேருந்துகளின் பயணிகள் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .