விவசாயிகளை பாதுகாத்தல் மற்றும் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்தல் என்பன தொடர்பில் அமைச்சரவைக்கூடத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன் இது தொடர்பாக மஹிந்த அமரவீர இது சம்மந்தபட அமைச்சரவை பத்திரங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை சந்திப்பின் பின்னர் ஊடகங்க்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு நிவாரணம் வளங்க்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறைந்த விலையில் நுகர்வோருக்கு பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கு கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சரவை சந்திப்பு கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக சில வரங்களின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் இணையவழி சந்திப்பினுடாக இடம்பெற்றுள்ளது .
இதேவேளை ஏப்ரல் 21 தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதியின் இறுதி அறிக்கை நேற்றைய தினம் முன்வைக்கப்பட இருந்த நிலையில் அடுத்தவாரம் முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .