T24 Tamil Media
இலங்கை

நுண்நிதி கடன்கள் மற்றும் நிதிநிறுவன கடன்களால் பெரும் நெருக்கடிகளுக்குள் வடக்கு மக்கள்.

நுண்நிதி கடன்கள் மற்றும் நிதிநிறுவன கடன்களை பெற்றுக்கொள்ள ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடிகளை தருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் கால பகுதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மக்கள் பெற்ற கடனுகளுக்கான தவணை கட்டணங்களை மூன்று மாத காலத்திற்கு மீள பெற வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அறிவுறுத்தலை மீறி கடன்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

கடனாளிகளின் வீடுகளுக்கு செல்லும் ஊழியர்கள் தவணை பணத்தினை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வாழ்வாதரங்களை முற்றாக இழந்துள்ள குடும்பங்கள் தவணை பணத்தினை செலுத்த முடியாத நிலையில் ஊழியர்களின் நெருக்கடிகளால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேவேளை அது தொடர்பில் கடன்களை மீள பெற வரும் ஊழியர்களிடம் கேட்ட போது, தமக்கு நிறுவன தலைமை அலுவலகத்தில் இருந்து தவணை பணத்தினை சேகரிக்குமாறு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன.

தவணை பணத்தினை சேகரித்தால் மாத்திரமே அடுத்த மாதத்திற்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எமது அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளமையால் தான் தாம் கடன் வசூலிப்பில் ஈடுபட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆகவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து, இதற்கு ஓர் தீர்வினை பெற்று தர வேண்டும் என பாதிக்கப்படும் மக்கள் கோரியுள்ளனர்.

கடந்த வாரம் நல்லூர் பகுதியில் தவணை பணத்தினை பெற ஒரு வீட்டிற்கு நிதிநிறுவன ஊழியர் சென்ற போது செலுத்த பணம் இல்லாததால் , வீட்டில் இருந்த பெண் தனது கணவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

அதனால் உடனே அந்த வீட்டில் இருந்து வெளியேறிய குறித்த ஊழியர் சுகாதார பரிசோதகர் மற்றும் காவல்துறைக்கு அது தொடர்பில் அறிவித்துள்ளார்.

அதனை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்த போது செலுத்த பணம் இல்லாததால் தான் பொய் சொன்னதாக கூறியுள்ளார். அதனை அடுத்து குறித்த பெண்ணை காவல்துறையினர் கடுமையாக எச்சரித்தனர்.

இருந்த போதிலும், குறித்த பெண்ணின் வீட்டிற்கு தவணை பணத்தினை பெற சென்ற ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more