கண்டி மாவட்டத்தின் பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடகல தோட்டத்தில் ஆகலை ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் நண்பர்களுடன் நீராடச் சென்றிருந்த மடகல தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.