T24 Tamil Media
இலங்கை

நீதி மன்ற உத்தரவை மீறிய தனியார் மலக்கழிவு பவுசரால் நவாலியில் பதற்றம்.

மல்லாகம் நீதிமன்றின் உத்தரவை மீறி மலக்கழிவுகளை ஏற்றி வந்து கல்லுண்டாயில் வெளியில் கொட்டுவதற்கு முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு மானிப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதி கல்லுண்டாய் வெளியில் இடம்பெற்றுள்ளது.

நவாலி மக்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்லுண்டாயில் மலக்கழிவுகளைக் கொட்டுவதற்கு தடைவிதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் 2018ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியிருந்தது. 

அந்தக் கட்டளையை மீறி தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கல்லுண்டாய் பகுதியில் தொடர்ந்தும் மலக்கழிவுகளை கொட்டி வந்தன.

இந்த நிலையில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகருடன் கல்லுண்டாய் பகுதிக்குச் சென்ற மக்கள், அங்கு தனியார் நிறுவனம் ஒன்று பவுசரில் ஏற்றி வந்த மலக்கழிவுகளை கொட்டுவதற்கு முயற்சித்த வேளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

குறித்த பவுசரை தடுத்து வைத்திருந்த மக்கள் மானிப்பாய் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more