ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையிலிருந்து நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது எனினும் மக்கள் கொரோனா தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார பிரிவினரால் விடுக்கப்படும் வேண்டுகோள்களை கடைபிடித்து தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடாது வீடுகளில் தனித்திருந்து சுய பாதுகாப்பை உறுதிப்டுத்த வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் போதும் சமூக இடைவெளியினை பின்பற்றி சுய கட்டுப்பாட்டுடன் செயற்படுவதன் மூலமே மக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை பொறுத்த வரைக்கும் 17 பேர் கொரோனா தொற்றென இனங்காணப்பட்டுஉள்ளார்கள் அதில் நால்வர் குணமடைந்து மீண்டும் தமது வீடுகளை வந்தடைந்துள்ளார்கள் எனினும் கொரோனா தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மக்களாகிய நீங்கள் நீங்களாகவே சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டியது கட்டாயமானது ஏனெனில் தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்று நோய் முற்றாக குணமடைந்தது என யாராலும் சவால் விட முடியாது .
எனவே மக்கள் தத்தமது பாதுகாப்பினை தாமே உறுதிப்படுத்தி கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க செயற்படவேண்டும் எனவும் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்