யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு காவற்துறை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த 18 மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
இதனையடுத்து, மறுஅறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு காலை 5 மணி வரையில் தினமும் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.