ஹேகித்த வீதியில் இடம்பெறும் நீர் கட்டமைப்பு விஸ்தரிப்பு நடவடிக்கைகள் காரணமாக சில பிரதேசங்களில் நாளையத்தினம் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் வனவாசல உள்ளிட்ட சில பகுதிகளில் நாளையத்தினம் இரவு 10 மணி தொடக்கம் முதலாம் திகதி மாலை 04 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி வனவாசல, எவரிவத்த வீதி, பலகல, தெலங்கப்பத்த, மீகஸ்வத்தை, ஹேகித்த, பள்ளியாவத்தை மற்றும் எலகந்த ஆகிய பகுதிகளிலே இவ்வாறு குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.