நாட்டில் கொவிட் 19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினத்திலும் மேலும் 519 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனடிப்படையில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 495 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 23 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமையநேற்றைய தினம் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 23 பேருக்கும் மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 495 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
மேலும் இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்றைய தினத்தில் கொவிட் 19 தொற்றிலிருந்து 843 பேர் குணமைடைந்துள்ளதுடன் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 79, 999 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தொற்றிலிருந்து 74, 299 பேர் குணமடைந்துள்ளதுடன் இந்தநிலையில் தொற்றுறுதியான 5,255 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .