நாட்டின் தற்போதைய நிலைமையில் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான திகதியை அறிவிப்பதானது ஊசிதமற்றது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
நாட்டின் தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்றை நடத்துவது சாத்தியமற்றது எனவும் அவ்வாறு நடத்தினால் சர்வதேச மருத்துவர்களின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான அனுமதியை பெறாமல் ஏதேச்சையாக தேர்தலை நடத்துவது பொறுத்தமற்றது எனவும் அது மக்களை வெகுவாக பாதிக்கும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலை காட்டிலும் மக்களின் பாதுகாப்பே மிக முக்கியம் எனவும் அதனை உறுதிப்படுத்தினால் மாத்திரமே மக்கள் ஆணையை பெற்று ஜனநாயத்தை நிலைநாட்ட முடியும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.