நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் சீர்கேடுகளை விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற குழு ஒன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி தொற்று நோய்கள் மற்றும் கொவிட் 19 கட்டுப்பாட்டலுவல்கள் இராயங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன் சபாநாயகரின் அனுமதியுடன் சர்வதேச மகளீர் தினத்துடன் இணைந்ததாக எதிர் வரும் மார்ச் ஒன்பதாம் திகதி இந்த நாடாளுமன்ற குழுவை அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழு அறையின் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .
மேலும் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் பாகுபாடு மற்றும் ஏதாவது ஒரு பதவியில் தமது திறமை தகுதி மற்றும் இயலுமைக்கு அமைய பதவி உயர்வு பெரும் போது பெண் என்ற காரணத்தினால் இடம்பெறும் முறைக்கேடுகளை விசாரணை செய்யக்கூடிய அதிகாரம் கொண்ட நாடாளுமன்றக்குழு அவசியம் என்று அவரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சமூகத்தில் பல்வேறு துறைகலில் பெண்களுக்கு பாகுபாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான நிலையில் இந்த குழுவினுடாக பெண்களிண் திறமை இயலுமை மற்றும் தகுதி அடிப்படையில் முன்னேறிச் செல்ல உள்ள தடைகளை தடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.