T24 Tamil Media
இலங்கை

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சியினர் வலியுறுத்து

நாட்டில் கொரோனாத்தொற்றின் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷஷhட் பதியுதீன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஜனாதிபயிடம் முன்வைத்துள்ள ஆவணத்திலேNயு இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கூட்டி, அரசியல் கட்சிகளினதும், நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சவாலை முறியடிப்பதற்கு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில, பொறுப்புணர்வு கலந்த ஒத்துழைப்பை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டினதும, மக்களினதும் நன்மைக்காக, தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தவிர்த்து செயற்பட வேண்டியது அனைத்து அரசியற் கட்சிகளினது, தலைவர்களினதும் கடமையாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் பிரகார, கடந்த மார்ச் மாதம் இரண்டாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில, நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்கத்தை, ஒன்றிணைந்து ஒழிப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரகடனத்தை இரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது
இதற்கமைய, தேர்தல் நடாத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டதன் பின்ன, ஜனாதிபதிக்கு மீண்டும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனவும் குறித்த கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் ஏற்பட சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும, கலைக்கட்டப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மை கருதியே தாம் முன்வைப்பதாகவும, இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அவர்கள் முன்வைத்துள்ள 10 அம்சக் கோரிக்கையானது…..

  1. கொவிட் -19 கொரோனா வைரஸ் காரணமாக உருவாகியுள்ள பொது சுகாதார இடரின் பின்னணியிலும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கையிலும் புதிய பல சவால்கள் தோன்றியுள்ளன. இத்தொற்றுநோய் பரவுவதை நாம் கட்டுப்படுத்தலாம் என்று சில நாள்களுக்கு முன்பு இருந்த நம்பிக்கை துரதிர்ஷ்டவசமாக இப்போது தளர்கிறது.இதன் பரவுதலை அடுத்த சில வாரங்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் பொருளாதார, சமூக, அரசியல் தளங்களிலும் நாடு பல இடர்களை சந்திக்க நேரிடும்.
  2. நூற்றுக்கணக்கானவர்களுக்கு இது தொற்றியுள்ளது; பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். தங்களது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது முன்னிலை சுகாதார ஊழியர்கள் எம்மைப் பாதுகாப்பதற்காக அர்பணிப்போடு சேவை செய்கிறார்கள். எமது அரசியல் தீர்மானங்களினால் அவர்களது உழைப்பு வீண் போகக் கூடாது.
  3. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இருப்பதாலும் தேர்தல் நடாத்துவதற்கு உகந்த சூழல் இல்லாத காரணத்தினாலும் குறிப்பாக நிலையற்ற அரசியல் நிலைமை காணப்படுகிறது. ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப் புதிய திகதி ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. நாட்டின் சுகாதார நிலைமை மாற்றமடைவதன் அடிப்படையில் இத்திகதி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதையும் ஆணைக்குழு ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளது.
  4. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நீதியும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழல் ஏற்படசாத்தியம் இல்லை என்று நாம் நியாயமாக தீர்மானிக்க முடியும். அண்மித்த காலத்தில் தேர்தல் ஒன்றை நடத்தி எமது மக்களை தேவையற்ற சுகாதார இடர் ஒன்றிற்குள் நாம் தள்ளவும் கூடாது. எமது நாட்டு மக்கள் எப்பொழுதுமே தேர்தல் பரப்புரைகளில் ஊக்கமாக பங்குபற்றி, பெரும் எண்ணிக்கையாக திரண்டு வாக்களித்து, ஜனநாயகத்துக்கான தமது அர்ப்பணிப்பைக் காண்பித்துள்ளார்கள். நீதியும் சுதந்திரமானதுமான தேர்தல் முழுமையான பிரச்சார நடவடிக்கையை உள்ளடக்க வேண்டும். இது நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவும் அபாயத்தை அதிகரிக்கும். கடந்த வாரத்தில் இந்த தொற்று அதிகரித்த விதத்தை நாம் அறிவோம்.
  5. மற்றெல்லா ஜனநாயக நாடுகளைப் போலவே எமது நாடும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கல்துறை, நீதித்துறை என்ற மூன்று தனித்துவமான அதிகாரங்களை கொண்ட நிறுவனங்களால் ஆளப்படுகிறது. சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட் டுவதற்கு இம்மூன்று துறைகளும் இன்றியமையாதன. முன்னெப்போதும் சந்தித்திராத சவாலொன்று ஏற்பட்டுள்ள இவ்வேளையில் – மற்றைய நேரங்களை விட – இவற்றின் செயற்பாடுகள் அத்தியாவசியமாகின்றன. ஆனால் நாடாளுமன்றம் செயற்பாடற்று இருக்கும் இத்தருணத்தில் இந்த சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதியும் அரசமைப்பின் உறுப்புரை 70(7) இல் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரத்தை பிரயோகிக்க மறுக்கிறார். தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்படும் சூழலில் நாடாளுமன்றமும் நீண்ட காலத்துக்கு செயலிழந்து இருப்பதற்கான அபாயம் நிலவுகிறது.
  6. இந்த இடரின் மத்தியில் எழுந்துள்ள பல அவசரமான ஆட்சி விடயங்களைதீர்த்து வைப்பதற்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டி அதன் மூலம் அரசியல் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை பெறுவது சிறந்தது என்பது எமது உண்மையான நம்பிக்கையாகும். எழுந்துள்ள பொது சுகாதார சிக்கலுக்கு தேவையான புதிய சட்டங்கள் இயற்றுவதும், பொது நிதியிலிருந்து பணம் எடுப்பதற்கான நாடாளுமன்ற அனுமதி வழங்குவது என்பன நாடாளுமன்றம் செய்யக்கூடிய சில முக்கியமான, அவசர கடமைகளாகும்.
  7. அண்மைக்காலத்திலே நிறைவு பெறுவதற்கு சாத்தியமில்லாத – முன்னெப் போதும் சந்தித்திராத – பேரிடர் ஒன்றுக்கு நாம் அனைவரும் முகங்கொடுக்கிறோம். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக இந்த சவாலை முறியடிப்பதற்கு ஜனாதிபதிக்கு எமது பொறுப்புணர்வு கலந்த ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த பேரிடரின் மத்தியில் நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தவிர்த்து செயற்படவேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் கடமை என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.
  8. மேற்கூறியவற்றை அடைந்து நாட்டில் ஆட்சியானது முறையாகவும் சட்டபூர்வமாகவும் அரசமைப்புக்கு உட்பட்டதாகவும் அமைவதற்காக, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்க நாம் தயார். இக்காலத்தில் எமக்கு சம்பளம் வேண்டாமென்றும், அரசாங்கத்தை கவிழ்க்க முனைய மாட்டோம் என்றும் அரசாங்கத்தின் எந்த சட்டபூர்வமான செயற்பாட்டுக்கும் தடங்கல் விதிக்க மாட்டோம் என்றும் நாட்டு மக்களுக்கு நாம் உறுதி கூறுகிறோம். ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமாக பிரகடனப்படுத்தாத போதும் அதைப் பேணுவதில் அரசாங்கத்துக்கு உதவிவழங்கி வருவதில் எமது நல்லெண்ணத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.
  9. இந்த சூழ்நிலையில் பொறுப்புடனான ஒத்துழைப்பு வழங்கும் எமது எண்ணத்தை ஏற்று 2020 மார்ச் 2ஆம் திகதியிட்ட பிரகடனத்தை இரத்துச் செய்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரஸை அழிப்பதற்கும், அனைத்தும் சட்டபூர்வமாகவும் அரசமைப்புக்கு உட்பட்டும் நடைபெறு வதற்கும் ஆவன செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதியை நாம் கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட பின்பு ஜனாதிபதி நாடாளுமன்றத்தை மீண்டும் கலைக்க முடியும்.

10.மாற்று செயற்பாடாக, ஜனாதிபதி, குறைந்தது அரசியலமைப்பின் 70(7) ஆவது உறுப்புரையின் கீழ் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். பொறுப்புடனான ஒத்துழைப்புக்கான இந்த யோசனையானது எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் இதய சுத்தியோடு நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக மட்டுமே செய்யப்படுகிறது என்பதில் ஜனாதிபதி அவர்களும் முழு நாடும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more