நாடளாவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (5) ஆகிய இரு தினங்களும் காவற்துறை ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இரு தினங்களிலும் காவற்துறை ஊரடங்கு முழுமையாக அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜுன் 6 சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் இன்று புதன்கிழமை வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.