ஆய்வொன்றின் ஊடாக வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் பேருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் என்.சி விதானகே நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஆய்வில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் பிறப்பு சான்றிதழ் இல்லாத 80 ஆயிரம் பேர் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் வாழும் 50 ஆயிரம் பேருக்கு பிறப்பு சான்றிதழ் கிடையாது என்றும் அவர் குறிப்பிடுள்ளார் .
இந்த பிரச்சனை தொடர்பாக மலையம், வடக்கு, கிழக்கு மற்றும் குடிசைகளில் வாழும் பெரும்பாலானோரை, எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறைந்த வயதில் திருமணமாகி, பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறாமை, போதிய தெளிவின்மை உள்ளிட்ட விடயங்களினால் பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.