பலாலி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரை வடக்கு மாகாணத்தில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.