T24 Tamil Media
இலங்கை

தேர்தலை தள்ளிப்போட தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எத்தகைய அதிகாரமும் இல்லை

தேர்தலை தள்ளிப்போட தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எத்தகைய அதிகாரமும் இல்லையென ஆளும் அரசாங்கத்தின் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு தேர்தலை நடாத்த வேண்டாம் என எதிர்கட்சிகள் பிரஸ்தாபித்துவரும் நிலையில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுரை என்னவோ அதனை பின்பற்றி தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும்.

தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் கால வரையறையின்றி தேர்தலை தள்ளிப்போட முடியாது.
இம்மாதம் 25 ஆம் திகதி தேர்தல் நடாத்தப்படும் என்ற வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட நிலையில் குறித்த காலத்தில் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஆகவே காலதாமதம் ஏற்பட்டாலும் அடுத்ததாக தேர்தலை நடத்தும் திகதியை அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு தேர்தல் திகதியை அறிவிக்காது தேர்தலை தள்ளிப்போட தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை.

எனவே தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடி இது குறித்த தீர்மானம் ஒன்றினை அறிவிக்கும் என தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த நெருக்கடி நிலையிலும் தேர்தலை நடாத்தி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல. தேர்தல் நடத்தப்பட வேண்டும் ஆனால் மக்களை நெருக்கடிக்குள் தள்ளி தேர்தலை நடத்த அரசாங்கம் ஒருபோதும் நினைக்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் முற்றாக நாட்டில் தடுக்கப்பட்ட பின்னர் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த தீர்மானம் எடுக்கப்படும்.
மேலும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துக்கொண்டு நாட்டினை முடக்கத்தில் வைத்திருக்க முடியாது.

தொழில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதரத்தை பலபடுத்த வேண்டும்.

அதற்கான மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டும். மக்களை வீடுகளுக்கும் வைத்திருப்பதால் மக்களின் வாழ்வாதாரமே முற்றுமுழுதாக பாதிக்கப்படும். எனவே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்றே இவ்வாறான தீர்மானங்களை நாம் முன்னெடுக்கின்றோம் என்றார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more