கொழும்பு மாவட்டத்தின் வெல்லம்பிட்டிப் பகுதியில் துப்பாக்கி மற்றும் வெடிபொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கொலன்னாவையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
இவ்வாறு கைதானவர்கள் இரூ பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக தேடப்பட்டு வந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.