T24 Tamil Media
இலங்கை

திருமலையில் மொத்தமாக 16 களஞ்சியசாலைகள் பரீசிலிக்கப்பட்டதுடன் அங்கிருந்த 2400 மெட்ரிக் டொன் அரிசி பாவனையாளர்கள் அதிகார சபையால் இனங்காண்பு!

திருகோணமலை மாவட்ட நெல் மொத்த வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(08) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.

கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நெல்லை அளவுக்கதிகமாக களஞ்சிசாலைகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 16 களஞ்சியசாலைகள் பரீசிலிக்கப்பட்டதுடன் அங்கிருந்த 2400 மெட்ரிக் டொன் அரிசி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் இனங்காணப்பட்டுள்ளதுடன்

அக்களஞ்சியசாலைகளுக்கு முத்திரையும் பதிக்கப்பட்டதாக இதன்போது அரசாங்க அதிபர்

மேலும் இந்நடவடிக்கையின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 380 மெட்ரிக் டொன் நெல் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு உரியவர்களால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் ஆறு வர்த்தகர்கள் 293 மெட்ரிக் டொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்கு தங்களுடைய விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளனர். மேலும் முத்திரையிடப்பட்ட 2400 மெட்ரிக் டொன் நெல்லினுள் 1800 மெட்ரிக் டொன் அளவான நெல்லை அவர்கள் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்கு தங்களுடைய விருப்பத்தை இதன்போது பூரணமாக தெரிவித்தனர்.

மேலும் தங்களது விதைநெல் அதைப்போன்று உணவுக்கு அவசியமான நெல் சாதாரணமான முறையில் அவர்களுக்கு கிடைக்கப் பெறுவதை உறுதி செய்து கொண்டு மேலதிகமாக இருந்த நெல்லை இவ்வாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க தயார் என இதன்போது கலந்து கொண்ட நெல் மொத்த வியாபாரிகள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.

அதற்கிணங்க அவர்களது நியாயமான கோரிக்கை மீது கவனம் செலுத்திய அரசாங்க அதிபர் அதற்கேற்றாற்போல் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இன்று மாலை முதல் குறித்த களஞ்சிய சாலைகளில் இருக்கக்கூடிய நெல் அரச நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகத் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீனி மொத்த வியாபாரி ஒருவர் தம்மிடம் இருக்கக்கூடிய சீனி இருப்புத் தொகையை நியாயமான முறையில் அனைத்து வியாபாரிகளுக்கும் அதேபோன்று சில்லரை வியாபாரிகளுக்கும் விநியோகிக்க உள்ளதாகவும் அச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பி.ஆர்.ஜயரத்ன ,பிரதேச செயலாளர்கள், நெல் மொத்த வியாபாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more