T24 Tamil Media
இலங்கை

திருமணத்திற்காக சென்றிருந்த 14 பேர் தனிமைப்படுத்தலில்!

மினுவாங்கொடையில் பதிவுத் திருமணத்திற்காக சென்றிருந்த 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாப்பிள்ளை உட்பட அந்தப் பதிவுத் திருமணத்திற்குச் சென்றிருந்த 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞனும், யுவதியும் கடந்த 2 ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்துகொண்டிருந்ததாகவும், 9ஆம் திகதி அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பியகம நிர்வாக பொதுச் சுகாதார ஆய்வாளர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடைக்கு கடந்த 2ஆம் திகதி பதிவு திருமணம் செய்ய தனது உறவினர்களுடன் இளைஞன் ஒருவர் சென்று திரும்பிய சில நாட்களில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞர் உட்பட அவருடன் சென்ற 14 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவர்களுக்குப் பதிவு திருமணம் செய்துவைத்த சபுகஸ்கந்த கோனவல பகுதியிலுள்ள திருமணப் பதிவாளர் மற்றும் திருமண சாட்சிக்குக் கையொப்பமிட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more