T24 Tamil Media
இலங்கை

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்குள் 28 பேர் மரணம்- 846 தொற்றாளர்கள்!

நாட்டில் கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்து
வருகிற நிலையில் திருகோணமலையில் செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் 846 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் வெளியிடப்பட்ட நாளாந்தம் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைக்கும் 10 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 276 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும்,156 கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வயது தொடக்கம் ஐந்து வயது வரை 164 சிறார்களும், 65 வயதுக்கு மேற்பட்ட 427 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் 9 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பகுதியில் 2419 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் பதவிசிறிபுர பகுதியில் 209 பேரும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 359 பேரும்,குச்சவெளியில் 1141 பேரும்,உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 1794 தொற்றாளர்களும், மூதூரில் 1439 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் கிண்ணியாவில் 645 பேரும்,குறிஞ்சாங்கேணியில் 441 ஒரு பேரும், கந்தளாயில் 1263 பேரும், தம்பலகாமத்தில் 647 பேரும், சேறுவில பிரதேசத்தில் 242 பேரும், ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் 62 பேரும் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் குறிப்பிட்டுள்ளது

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more