எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தலவாக்கலை வர்த்தக நிலையங்களில் திடீரென பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய குறித்த சோதனை நடவடிக்கையினை கொட்டகலை பொது சுகாதார காரியாலயம் லிந்துலை நகர சபை ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.
அத்துடன் இந்த புத்தாண்டினை முன்னிட்டு அத்தியாவசிய உணவு பொருட்களை கொள்வனவு செய்ய நகருக்கு வரும் நுகர்வோர் நலன் கருத்தியே மேற்படி திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து உணவு பொருட்கள் விற்பனை நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டதாகவும் அங்கு பாவனைக்குதவாத, பருப்பு ,உழுந்து உட்பட சில பொருட்கள் மீட்கப்பட்டு தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.