தற்போது கோவிட் 19 தொற்று அடையாளம் கண்டு கொள்வதற்கு புதிய வகையான நடைமுறை ஒன்றினை பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் இலங்கையரான கலாநிதி நிலிகா மலவிகே தலைமையிலான குழுவே இதனை கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில் விரலிலிருந்து எடுக்கப்படும் ஒரு துளி இரத்தத்தின் ஊடாக கொரோனா வைரஸை அடையாளம் கண்டுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறையானது மிக விரைவாக செய்யக்கூடிய ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதன் ஆரம்பகட்ட பரிசோதனைகள் வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.