எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தபால் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவதற்கு தபாற்திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு திணைக்கள் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எட்டு மணிநேர சேவையில் மாத்திரமே ஈடுபடுவது என்றும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.