T24 Tamil Media
இலங்கை

தன்னுடன் தங்கியிருந்தவரை 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்த இலங்கையர் வழக்கு! பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

தன்னுடன் ஒரே அறையில் தங்கியிருந்தவரை 21 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழரை பிரித்தானியாவில் இருக்க அனுமதிக்கலாம் என நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைக்கு பெயர் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான GR என்பவர், 2002ஆம் ஆண்டு, அவருக்கு 28 வயது இருக்கும்போது பிரித்தானியாவுக்கு வந்தார்.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது தான் ஒரு தமிழர் என்ற விதத்தில் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் தனக்கு புகலிடம் தரவேண்டும் என கோரியிருந்தார் GR.

ஆனால் உள்துறை அலுவலகம் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் GR, அதுவும் தோல்வியில் முடிந்தது… தொடர்ந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவுமே வெற்றி பெறாத நிலையில், குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார் அவர்.

குற்றச்செயல்களின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்று, கடைசியாக 2010ஆம் ஆண்டு தன்னுடன் தங்கியிருந்த ஒருவரை 21 முறை GR கத்தியால் குத்த, அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இப்போது 45 வயதாகும் GRக்கு, இல்லாததை இருப்பது போல் தோன்றக்கூடிய மன நல பிரச்சினையாகிய paranoid schizophrenia என்ற பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் மீண்டும் புகலிடக் கோரிக்கை விடுத்தார். மனித உரிமைகள் சட்டம், ஷரத்து 3இன் அடிப்படையில் GR பிரித்தானியாவில் இருக்கலாம் என கீழ் புலம்பெயர்தல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இலங்கை எல்லையில் அவர் கடுமையாக நடத்தப்படலாம் என்பதால், அவருக்கு மனித உரிமைகள் சட்டம், ஷரத்து 3இன் அடிப்படையில் பிரித்தானியாவில் இருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் தெரிவித்தது.

இதற்கு உள்துறை செயலர் பிரீத்தி படேல் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேல் புலம்பெயர்தல் தீர்ப்பாயம், கீழ் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது, அதாவது, GR பிரித்தானியாவில் இருக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஷரத்து 3இன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more