இலங்கையில் பகுதியளவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இன்று முதல் தனியார் பேருந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.
பயணத்தின் போது ஆசனத்தில் ஒருவர் மாத்திரமே அமர முடியும் எனவும் இந்த நடவடிக்கை 40 நாட்களுக்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தனியார் பேருந்து சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதாரநடவடிக்கைகள் பேருந்துகளில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிய வேண்டும்எனவும் தனியார் பேருந்து சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன இதன் போது தெரிவித்துள்ளார்.