T24 Tamil Media
இலங்கை

தனிமைப்படுத்தல் நிலையத்தில் மூவருக்கு கொரோனா.

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்கள் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமையால் வைத்தியசாலையும் தொற்று நீக்கப்பட்டது.

அண்மையில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி கொவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் பலர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள 324 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் மூவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் வெலிக்கந்த கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயில் இன்றையதினம் காலை மூடப்பட்டு, வெளிநோயாளர் பகுதி உட்பட பல்வேறு பகுதிகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more