இலங்கையின் தென் பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தலத்துஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் மேற்கொள்வதற்காக உடனடியாக குறித்த காவல்த்துறை உத்தியோகத்தரை கைது செய்யுமாறு கண்டிக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி உத்தரவுகளை பிறப்பித்தார்.
குறித்த காவல்த்துறை உத்தியோகத்தர் 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டர்களைக் கண்காணிக்க கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையிலேயே பெண்ணிடம் எல்லை மீறியதாக கூறப்படுகின்றது.